< Back
மாநில செய்திகள்
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

தினத்தந்தி
|
8 July 2023 12:54 AM IST

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வுபெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கும், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், அனைவரிடமும் நட்போடும், மனிதாபிமானத்தோடும், சாதி, மத, பேதமின்றி சகோதரத்துவத்துடனும் பழக வேண்டும். மேலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் இளைஞர்களால் மட்டுமே அது சாத்தியமாகும். அவற்றை சாத்தியமாக்கி காட்ட வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களின் கடமையாகும். மேலும் கல்வியை ஆயுதமாக கொண்டு நீங்கள் அனைவரும் சிறந்த அரசு ஊழியர்களாக அமர வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்