< Back
மாநில செய்திகள்
சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை...!
மாநில செய்திகள்

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை...!

தினத்தந்தி
|
14 Jan 2024 1:45 PM IST

நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சென்னை கொளத்தூரில், காவல் உதவி ஆய்வாளர் ஸ்டேனீஸ் லாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல் ஆணையர் அலுவலகம் மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்பு பிரிவில் ஸ்டேனீஸ் லாஸ் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.

நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்