< Back
மாநில செய்திகள்
விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை - வாலிபர் கைது

கைது செய்யப்பட்டுள்ள சுருளீஸ்வரன்

மாநில செய்திகள்

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை - வாலிபர் கைது

தினத்தந்தி
|
27 July 2022 4:29 PM IST

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொலை செய்ததாக வாலிபர் ஓருவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால். கூலி தொழிலாளியான இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர் இன்று காலை தனது குழந்தையை பள்ளியில் கொண்டு விட்டு விட்டு வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சுருளீஸ்வரன் (32) என்பவர் சரஸ்வதி வீட்டிற்குள் நுழைந்தார். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி சுருளீஸ்வரனை வெளியே போகும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால் சுருளீஸ்வரன் சரஸ்வதியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுருளீஸ்வரன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரஸ்வதியின் தலையில் தாக்கி படுகாயப்படுத்தி விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அரச ஆஸ்பத்திரிக்கை போகும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் பெரிய பேராலி கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சரஸ்வதி வீட்டுக்கு செல்லும் பொழுது வழியில் சுருளீஸ்வரன் மற்றொரு பெண்ணையும் தாக்கியதாக தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கிராமத்தில் இருந்த சுருளீஸ்வரனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பேராலி கிராமத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்