< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
செங்கல்பட்டு: கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
|15 Jun 2022 8:06 AM IST
செங்கல்பட்டு அருகே கிணற்றில பிணமாக கிடந்த பிளஸ்-1 மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அசோக்குமார் (வயது 16). இவர் செட்டிபுண்ணியம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே காச்சாடிமங்கலம் கிராமத்தில் உள்ள வேதகிரி என்பவரது கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் அசோக் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.