< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மீட்பு பணிக்கு போலீசார் தயார்
|4 Nov 2022 12:51 AM IST
வடகிழக்கு பருவமழையையொட்டி மீட்பு பணிக்கு போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
சங்கராபுரம்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சங்கராபுரம் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் 20 போலீசார் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான ரோப் கயிறு, மரம் அறுக்கும் எந்திரம், மண்வெட்டி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர்.