விருதுநகர்
அருப்புக்கோட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
|தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அருப்புக்கோட்டையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் அருப்புக்கோட்டை வழியாக பசும்பொன் செல்வது வழக்கம்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அருப்புக்கோட்டை காந்திநகர் மற்றும் ராமலிங்கா மில் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருப்புக்கோட்டை துணை சூப்பிரண்டு கருண் காரட் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் 45 சப்-இன்ஸ்பெக்டர்கள் 205 போலீசார், 50 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசும்பொன் செல்லும் வாகனங்களை முறையாக சோதித்து அனுமதி பெற்று செல்கின்றனரா? ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா? என முழுமையாக வீடியோ பதிவு செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். தீயணைப்பு துறை வாகனமும் ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது.