< Back
மாநில செய்திகள்
தலை, கைகளை துண்டித்து கொலையான ஆட்டோ டிரைவரின் கள்ளக்காதலியிடம் போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

தலை, கைகளை துண்டித்து கொலையான ஆட்டோ டிரைவரின் கள்ளக்காதலியிடம் போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
29 May 2022 12:05 PM IST

பூந்தமல்லி அருகே தலை, கைகளை துண்டித்து கொலையான ஆட்டோ டிரைவரின் கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் வாலிபர் ஒருவர் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உடல் எரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி திருவேற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீன்(வயது 28) என்பது உறுதியானது.

இவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து விருகம்பாக்கத்தில் துணை நடிகை ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது கள்ளக்காதலியிடம் திருவேற்காடு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் கடைசியாக சிராஜூதீன் செல்போனில் யாரிடமெல்லாம் பேசினார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் குறித்தும், துண்டிக்கப்பட்ட அவரது தலை, கைகள் எங்கே வீசப்பட்டது? என்பது குறித்தும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்