< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு
|10 Jun 2023 12:31 AM IST
ஓச்சேரி அருகே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்த பொன்னியம்மன் பட்டறை செக்போஸ்ட் அருகே அவளூர் போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணிவதால் சாலை விபத்திலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிவேக பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டக்கூடாது. முறையாக அனைத்து வாகனங்களுக்கும் ஆவணங்கள் இருக்கவேண்டும். கார் ஓட்டும்போது சீட்பெல்ட் அணியவேண்டும் என சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி வாகன ஒட்டிகளிடம் கூறினார்.