< Back
மாநில செய்திகள்
குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

தினத்தந்தி
|
23 March 2023 1:07 AM IST

குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழக அலுவலகத்தில், போலீசார்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் சிதம்பரம் தலைமை தாங்கினார். கமிட்டி உறுப்பினர் கந்தப்பன் வரவேற்றார். இதில் பேராவூரணி பகுதியில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு ேகமரா பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் பேசுகையில், 'பேராவூரணி நகரின் அமைதி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வர்த்தகர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என்றார். இதில் கமிட்டி உறுப்பினர் டாக்டர் சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் அப்துல்லா, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்