< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோட்டில்போலீசாருக்கு ஸ்மார்ட் காவலர் செயலி பயிற்சி
|25 Dec 2022 12:15 AM IST
பாலக்கோடு:
பாலக்கோடு உட்கோட்டத்திற்குட்பட்ட பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையம் என 6 போலீஸ் நிலையத்தை சேர்ந்த 119 போலீசாருக்கு இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலி பயன்படுத்துவது குறித்த பயிற்சி அங்குள்ள தனியார் பள்ளியில் நடந்தது. போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமை தாங்கினார். போலீசார் ரோந்து செல்லும்போது எளிதில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த புதிய செயலி உள்ளது என்றும், இருக்கும் இடத்தில் இருந்து குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சியில் விளக்கி கூறப்பட்டது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, ஜாபர் உசேன், வெங்கட்ராமன், வீரம்மாள் மற்றும் குற்றப்தடுப்பு பிரிவு பயிற்சி போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.