< Back
மாநில செய்திகள்
ஓசூர் பகுதியில்ஜாமீன் பெற்று கோர்ட்டில் ஆஜராகாத 9 பேருக்கு வலைவீச்சு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூர் பகுதியில்ஜாமீன் பெற்று கோர்ட்டில் ஆஜராகாத 9 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

ஓசூர்:

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளவர்களை உத்தனப்பள்ளி, பேரிகை, பாகலூர், சிப்காட், ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஓசூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜாமீன் பெற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நிபந்தனை ஜாமீன் பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வரும் 9 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்