விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
|விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அவர் கவர்னரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, "விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் மனு அளித்தோம். கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இருந்தும் கள்ளச்சாராயம் எப்படி வந்தது? பின்னர் எதற்கு டாஸ்மாக் செயல்படுகிறது?
ஆட்சியாளர்கள், காவல்துறையினர் துணை இல்லாமல் நிச்சயமாக இந்த தவறு நடந்து இருக்காது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு தான் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறது". இவ்வாறு அவர் கூறினார்.