விஷ சாராய வழக்கு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாா் முடிவு
|விஷசாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 88 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோி ஆகிய பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 229 போ் பாதிக்கப்பட்டனா். இதில் 64 போ் உயிாிழந்தனா். 88 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 78 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் மெத்தனால் கலந்த சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொியவந்தது. இதையடுத்து மெத்தனால் கலந்த சாராயம் விற்றது தொடா்பாக கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, தம்பி தாமோதரன், சேஷசமுத்திரத்தை சோ்ந்த சின்னதுரை கதிரவன், கண்ணன் உள்பட 21 பேரை போலீசாா் கைது செய்து கோா்ட்டில் ஆஜா்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் மெத்தனால் எங்கிருந்து வினியோகம் செய்யப்பட்டது, யாா் யாருக்கெல்லாம் வினியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை தொிந்து கொள்வதற்காக கைது செய்யப்பட்ட சாராய வியாபாாிகள் மற்றும் மெத்தனால் வினியோகம் செய்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜ், மடுகரையை சோ்ந்த மாதேஷ், சிவக்குமாா், பன்ஷில்லால், கவுதம் சந்த், கதிரவன், கண்ணன், சக்திவேல் ஆகிய 11 பேரை காவலில் எடுத்து விசாாிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிபிசிஐடி போலீசாா் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.