< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் கரை ஒதுங்கும் விஷத்தன்மை வாய்ந்த 'புளூ டிராகன்' மீன்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
|22 Dec 2023 10:42 PM IST
‘புளூ டிராகன்’ வகை மீன்கள் கொட்டினால் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
சென்னை,
சென்னை பெசண்ட்நகர் கடற்கரையில் விஷத்தன்மை வாய்ந்த 'புளூ டிராகன்' மீன்கள் கரை ஒதுங்குகின்றன. பொதுவாக ஆழ்கடலில் வசிக்கும் தன்மை வாய்ந்த புளூ டிராகன் மீன்கள், விஷக் கொடுக்குகளை கொண்டுள்ளன. புயல் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக இவை கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை மீன்கள் கொட்டினால் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும். தற்போது பெசண்ட்நகர் கடற்கரையில் இந்த மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்கி வருகின்றன. பார்ப்பதற்கு அழகாக காணப்படும் இந்த 'புளூ டிராகன்' மீன்களில் விஷத்தன்மை இருப்பதால், கடற்கரைக்கு செல்வோர் இதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.