< Back
மாநில செய்திகள்
விஷ வண்டு கடித்து 6 பேர் காயம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விஷ வண்டு கடித்து 6 பேர் காயம்

தினத்தந்தி
|
19 May 2022 5:19 PM GMT

தியாகதுருகம் அருகே விஷ வண்டு கடித்து 6 பேர் காயம்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உடையனாச்சி ஊராட்சிக்குட்பட்ட உ.புதூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அய்யனார் கோவில் அருகே உள்ள நீர்வரத்து வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது முட்புதரில் இருந்து பறந்து வந்த விஷ வண்டுகள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்தன. இதனால் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

விஷ வண்டுகள் கடித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(வயது 75), பொன்னுசாமி(80), கண்ணு(85), மண்ணாங்கட்டி(80), முருகவேல்(35), பாவாடை கிருஷ்ணன்(58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் விஷ வண்டுகள் கடித்து சிகிச்சைபெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்