< Back
மாநில செய்திகள்
விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம்: மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது
மாநில செய்திகள்

விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம்: மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது

தினத்தந்தி
|
17 May 2023 7:04 AM IST

விஷ சாராயம் குடித்து பலியான விவகாரம் தொடர்பாக மெத்தனால் சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரவாயல்,

விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அவர்கள் குடித்ததால் இறந்து போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான விசாரணையில், செங்கல்பட்டு மாவட்ட மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி (வயது 45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31), ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்