< Back
மாநில செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே  மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை  நண்பருக்கு தீவிர சிகிச்சை
கடலூர்
மாநில செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை நண்பருக்கு தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
24 July 2022 11:14 PM IST

சேத்தியாத்தோப்பு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா். அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் தமிழ் குமரன்(வயது 27), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், நண்பரான அதே பகுதியை சேர்ந்த தில்லை வல்லாளன் மகன் பிரசாந்த் என்பவரும் சேர்ந்து ஒரத்தூர் பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது, திடீரென இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர்.


மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்