< Back
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி
மதுரை
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

தினத்தந்தி
|
3 Jun 2022 7:37 PM IST

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்து உள்ளது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாரப்பத்தி அருகே சுமார் 3 வயது மதிக்கதக்க ஒரு ஆண் புள்ளிமான் இன்று காலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் திடீரென்று புள்ளிமான் மீது மோதியது.

அதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை புதூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்