< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பெண்கள் பள்ளியில்புகையில்லா போகி பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு பெண்கள் பள்ளியில்புகையில்லா போகி பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
12 Jan 2023 12:15 AM IST

நாமக்கல் நகராட்சி சார்பில் புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வருகிற 14-ந் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகிப் பண்டிகை கொண்டாடும் போது பொதுமக்கள் தேவையில்லாத பொருட்களை தெருக்களில் கொட்டி எரிக்க கூடாது. வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்கள் வசம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் சாக்கடைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது. குப்பைகளை எரித்து சுற்றுப்புறத்தை மாசு அடைய வைக்க கூடாது என மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்