மதுரை
போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
|போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
பேரையூர்
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பூசலபுரம் கிராமத்தில் வளர் இளம் பருவத்தில் தாய்மை அடைத்தலை தடுத்தல் குறித்தான விழிப்புணர்வு முகாமினை சமூக நலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, கல்வித்துறை, இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முகாமினை மாவட்ட சமூக நல அலுவலர் பரமேஸ்வரி தொடங்கி வைத்தார். முகாமில் குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், வளர் இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, கல்வியின் முக்கியத்துவம், புதுமைப்பெண் திட்டம், குழந்தைகளுக்கான கட்டணம் இல்லாத தொலைபேசி எண், சைல்ட் லைன் உதவியை எப்படி பெற வேண்டும், பள்ளிக்கல்வித்துறை எண், ஒருங்கிணைந்த சேவை மைய எண், ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முகாமில் கிராமத்தில் இளம் வயது திருமணம் நடக்காது என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. முகாமில் மாவட்ட தாய் சேய் அலுவலர் செல்வ காமாட்சி, குடும்ப நல அலுவலர் பரசுராம், வட்டார மருத்துவ அலுவலர் விஸ்வநாத பிரபு, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூக பணியாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.