< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
வாலிபர் மீது போக்சோ வழக்கு
|12 Aug 2023 1:45 AM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து கருவை கலைக்க அந்த சிறுமி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கோபிநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.