< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் மீது போக்சோ வழக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

தினத்தந்தி
|
30 April 2023 12:15 AM IST

ராசிபுரம் அருகே அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிாியர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.

ராசிபுரம்

மாணவிக்கு பாலியல் தொல்லை

ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 56). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இயற்பியல் பாடம் பயிலும் மாணவிகளிடம் சில்மிஷத்திலும், இரட்டை அர்த்தத்திலும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அதே கல்லூரியில் 17 வயது மாணவி ஒருவர் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் சுந்தரமூர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

போக்சோவில் வழக்குப்பதிவு

இது பற்றி அந்த மாணவி நேற்று முன்தினம் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது புகார் அளித்தார். இதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேராசிரியர் சுந்தரமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

மேலும் தலைமறைவாக உள்ள பேராசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராசிபுரம் அருகே அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிாியர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்திருப்பது கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்