< Back
தமிழக செய்திகள்
பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தினத்தந்தி
|
7 Nov 2022 1:18 AM IST

கபிஸ்தலம் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கபிஸ்தலம் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

16 வயது சிறுமி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அருகில் உள்ள புள்ளபூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

இதுதொடர்பான விசாரணையில் அவரை ஆதனூர் கிராமத்தில் வசிக்கும் தியாகராஜன் மகன் ராஜேஷ்குமார் (வயது22) என்பவர் கடத்திச்சென்றது தெரியவந்தது. இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் பாபநாசம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜேஷ் குமார் மற்றும் அந்த மாணவி ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து கபிஸ்தலம் அழைத்து வந்தனர்.

பின்னர் 16 வயது மாணவியை கடத்திச் சென்றதாக ராஜேஷ்குமார் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்