< Back
மாநில செய்திகள்
பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
29 April 2024 12:33 PM IST

பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆகிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வருகின்ற மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த கலந்தாய்வுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்