< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
|3 July 2023 6:56 PM IST
கணியம்பாடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூரை அடுத்த கணியம்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய தலைவர் சோமசுந்தரம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.
கணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை அதிகம் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே கஞ்சா மற்றும் சாராய விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.