திருவண்ணாமலை
பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தண்டராம்பட்டு ரோடு தேனிமலை போக்குவரத்து பணிமனை எண் 2-ன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொதுச் செயலளாளர் சம்பத் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சிவக்குமார் எம்.எல்.ஏ., பாட்டாளி தொழிற்சங்க மாநில தலைவர் நந்தகோபால், மாநில பொதுச் செயலாளர் இராம.முத்துக்குமார், மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் விடுப்பு அனுமதித்தல், ரூட் போஸ்டிங் போன்றவற்றில் தொழிலாளர் விரோத பாகுபாடான நடவடிக்கையை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் நிறுத்தப்பட்டா சந்தாவை உடனே மாற்ற வேண்டும். நீக்கப்பட்ட பாட்டாளி தொழிற்சங்க நபர்களை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும்.
பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க மாநில இணைத் தலைவர் வீரமணி, இணை செயலாளர் க.வடிவேல், இணை பொருளாளர் சேகர், மண்டல தலைவர் பாபு, மண்டல பொருளாளர் காண்டீபன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, ஏழுமலை, மாவட்ட தலைவர்கள் பெரியசாமி, ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மத்திய சங்க துணை செயலாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.