கள்ளக்குறிச்சி
பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
|உளுந்தூர்பேட்டையில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை;
தமிழக இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா, குட்கா, பான் மசாலா ஆகியவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும், போதை பொருடகளை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. சார்பில் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராஜா(கிழக்கு), தமிழரசன்(மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கே.பி. பாண்டியன், துணை செயலாளர் ஏ.எஸ்.வாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் நாராயணன், நிர்வாகிகள் பப்லு, ராமு, பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் தென்றல் பாலு நன்றி கூறினார்.