< Back
மாநில செய்திகள்
போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 July 2022 7:54 PM IST

திண்டுக்கல்லில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், குட்கா பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இன்று ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, சிவக்குமார், மாவட்ட தலைவர்கள் மணி, வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் வெள்ளை கோபால், மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், குட்கா பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Related Tags :
மேலும் செய்திகள்