< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
|2 July 2022 9:10 PM IST
தனி தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம் ரிஷிவந்தியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோரியும், அரசு அறிவியல் கலைக்கல்லூரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க கோரியும் பா.ம.க. சார்பில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ரிஷிவந்தியத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மயிலம் சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள். இதில் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.