விழுப்புரம்
தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு: பா.ம.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
|பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திண்டிவனம்,விழுப்புரத்தில் பா.ம.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
விழுப்புரம்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இதை வரவேற்கும் வகையில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதன்படி, திண்டிவனத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இதில் மாநில சட்ட பாதுகாப்பு குழு செயலாளர் பாலாஜி, மாநில துணை தலைவர் சங்கர், செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் சலவாதி சேகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், நகர செயலாளர் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர்கள் பால்பாண்டியன் ரமேஷ், சண்முகம், கவுன்சிலர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சவுந்தர், நல்லாவூர் ராஜி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், கோபால், ராஜ்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
இதேபோல் விழுப்புரத்தில் நகர பா.ம.க.வினர் நகர செயலாளர்கள் போஜராஜன், இளந்திரையன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இதில் மாவட்ட தலைவர் தங்க ஜோதி, மாநில துணை தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் மணிமாறன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், ஞானவேல், மரகதபுரம் வக்கீல் சசிகுமார், பா.ம.க. நிர்வாகிகள் செல்வம், தேசிங்குராஜா, விஜியன், பாரி, சரவணன், மூர்த்தி, மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.