பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு
|வருகிற 19-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்,
கடந்த 2-ந்தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், இரண்டாவது முறையாக, வருகிற 19-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையை திறந்து வைப்பதாகவும், பின்னர், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்து வைக்கும் தேதி, திடீர் மாற்றப்பட்டுள்ளதால், பிரதமர் மோடியின் தமிழக பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டமும், மருத்துவமனை திறக்கும் நாளன்று நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.