< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடியின் தாயார் மறைவு - குஜராத் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

பிரதமர் மோடியின் தாயார் மறைவு - குஜராத் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
30 Dec 2022 9:19 AM IST

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குஜராத் செல்கிறார்.

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழ்ந்தார். அவருக்கு வயது 99 ஆகும்.

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கதில் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகமதாபாத் செல்கிறார். 12 மணி விமானத்தில் செல்லும் முதல்-அமைச்சருடன், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்