< Back
தமிழக செய்திகள்
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை ஏற்க இயலாது - வைகோ
தமிழக செய்திகள்

நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை ஏற்க இயலாது - வைகோ

தினத்தந்தி
|
24 May 2023 10:59 PM IST

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை ஏற்க இயலாது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதை ஏற்க இயலாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளன. எனவே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த நியாயமான கருத்தை ஏற்றுக்கொண்டு திறப்பு விழாவில் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்