< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடி வருகை: திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை: திருச்சி-புதுக்கோட்டை சாலையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
1 Jan 2024 11:01 AM IST

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திருச்சி வருகிறார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணி முதல் விமான நிலையம் வழியாக புதுக்கோட்டை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் ஜி.கார்னர், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம், மன்னார்புரம் மேம்பாலம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் சென்னை, சேலம், கோவை மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, விராலிமலை வழியாக புதுக்கோட்டை செல்ல வேண்டும்.

பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரும் கட்சி தொண்டர்களின் வாகனங்கள் நாளை காலை 9 மணி வரை மட்டுமே புதுக்கோட்டை சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். குண்டூர், மாத்தூர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் கட்சியினரின் வாகனங்கள் டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பைபாஸ் சந்திப்பு, புதிய சுற்றுச்சாலை, கும்பக்குடி வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்