அண்ணாமலையார் பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த பிரதமர் மோடி - வீடியோ வைரல்
|பல்லடம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்லடம்,
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். பல்லடம் வந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பிரதமர் மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா மற்றும் அவரது தாயார் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியின் முன் 'அச்யுதம் கேசவம்' மற்றும் ஒரு தமிழ் பாடலை கசாண்ட்ரா பாடினார்.
'அண்ணாமலையானே உந்தன் அன்பின் கலந்தோமே' என்ற பாடலை கசாண்ட்ரா பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். பக்தி பாடலை தாளமிட்டு ரசித்த கேட்ட பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்திய மொழிகளில் பல பக்திப் பாடல்களைப் பாடகி கசாண்ட்ரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.