< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
திருப்பூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை

தினத்தந்தி
|
10 July 2023 10:32 PM IST

தோழிகள் படிக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விடாததால் வெள்ளகோவில் அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி வளர்மதி. இவர்களது மகள் சத்தியா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவருடைய தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே தன்னையும் அரசு பள்ளியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் சத்தியா இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சத்தியா ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று சத்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்