< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பிளஸ்-2 மாணவி பலாத்காரம்; தோழியின் தந்தை-தாய் கைது
|22 March 2023 2:24 AM IST
பிளஸ்-2 மாணவி பலாத்காரம் தொடர்பாக தோழியின் தந்தை-தாய் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் பலாத்காரம்
திருச்சியை சேர்ந்தவர் சுரேஷ். நிதி நிறுவன அதிபரான இவர் பெயிண்டிங் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகளை தேடி, அவரது தோழியான பிளஸ்-2 மாணவி ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியை சுரேஷ், தனது வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தாய் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
கைது
அதன்பேரில் பொன்மலை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக சுரேஷ் மற்றும் அவரது மனைவி மெஹராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.