< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயம்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயம்

தினத்தந்தி
|
2 Oct 2023 11:59 AM IST

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் மாயமானார்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 17). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று மதியம் லோகேஸ்வரன், ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் உள்ள நண்பரின் உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மாலையில் லோகேஸ்வரன் தனது நண்பர்களுடன் ஆவடி அருகே அசோக்நகர் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் குளித்தார்.

கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் லோகேஸ்வரன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மாயமான மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் இருள்சூழ்ந்துவிட்டதால் தேடும் பணியை நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) காலை மாணவர் லோகேஸ்வரனை தேடும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்