< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை
|28 Sept 2022 1:42 PM IST
பல்லாவரத்தில் செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தையல்காரர். இவருடைய மகன் விக்னேஷ்குமார் (வயது 16). இவர், தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
விக்னேஷ் நேற்று காலை பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் செல்போனில் கேம் விளையாடினார். இதனை அவரது தந்தை செந்தில்குமார் கண்டித்தார். இதில் விரக்தி அடைந்த விக்னேஷ்குமார், வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.