< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்
|15 March 2024 5:35 PM IST
இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் இன்று இயற்பியல் , பொருளியல் , கணினி தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடந்தது.
இந்த நிலையில் , இன்று நடைபெற்ற பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் 11,821 பேரும் , தனித்தேர்வ்ர்கள் 1,254 பேரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.