< Back
மாநில செய்திகள்
பிளஸ்-2 விருப்ப பாடத்தேர்வு; 8,336 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்
விருதுநகர்
மாநில செய்திகள்

பிளஸ்-2 விருப்ப பாடத்தேர்வு; 8,336 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்

தினத்தந்தி
|
18 March 2023 12:12 AM IST

பிளஸ்-2 விருப்ப பாடத்தேர்வு; 8,336 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ்-2 விருப்ப பாடத் தேர்வில் கணினி அறிவியல் பிரிவில் 2,854 மாணவர்களும் 1,923 மாணவிகளும் என மொத்தம் 4,777 பேர் எழுத வேண்டிய நிலையில் 2777 மாணவர்களும், 1855 மாணவர்களும் 4,632 பேர் தேர்வு எழுதினர். 77 மாணவர்களும். 68 மாணவிகளும் ஆக மொத்தம் 145 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதேபோன்று கணினி பயன்பாட்டு பிரிவில் 1,549 மாணவர்களும், 1449 மாணவிகளும் என மொத்தம் 2,998 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,457 மாணவர்களும் 1,400 மாணவிகளும் என மொத்தம் 2857 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 98 மாணவர்களும், 49 மாணவிகளும் ஆக மொத்தம் 147 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நேற்று பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், பொலிடிகல் சயின்ஸ், புள்ளியல் நர்சிங், இந்திய பண்பாடு உள்ளிட்ட 10 விருப்ப பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வுகளை மொத்தம் 4,862 மாணவர்களும், 3,827 மாணவிகளும் என மொத்தம் 8,689 பேர் எழுத வேண்டிய நிலையில் 4,660 மாணவர்களும் 3,676 மாணவிகளும் என மொத்தம் 8,336 பேர் எழுதினார். இதில் 202 மாணவர்களும், 151 மாணவிகளும் என மொத்தம் 353 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்