< Back
மாநில செய்திகள்
வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:30 AM IST

வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

சிங்காநல்லூர்


வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.


பிளஸ்-1 மாணவி


கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அந்த மாணவிக்கு கடந்த 10-ந் தேதி திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. உடனே அந்த மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.


ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவியின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அந்த அறிக்கையில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.


போக்சோவின் கீழ் வழக்கு


எனவே சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் மாணவியுடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து விசார ணை நடத்தினர். இதில் மாணவியுடன் பழகிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்