< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பிளஸ்-1 மாணவி கர்ப்பம்; வாலிபர் கைது
|8 Dec 2022 1:49 AM IST
உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவி கர்ப்பம் அடைந்தார். இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி தாலுகா போளிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 25) இவர் மினி வேன் ஒன்றில் ஊர் ஊராக சென்று பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் நாகையாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீசார் பாண்டீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.