சேலம்
பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|வாழப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-1 மாணவி
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவரும், இவருடைய மனைவியும் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள வெவ்வேறு அரிசி அரவை ஆலைகளில் கணக்காளராக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சுகந்தி (16) மகளும், அபிஷேக் (13) என்ற மகனும் உள்ளனர்.
சுகந்தி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த 6 மாத காலமாக மாணவி, வாலிபர் ஒருவரிடம் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதையறிந்த மாணவி சுகந்தியின் பெற்றோர், படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என்று கூறி மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் அரிசி மில்லுக்கு வேலைக்கு சென்றனர். அதே நேரத்தில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் சுகந்தி வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. மதியம் வீட்டிற்கு வந்த ரமேஷ், தனது மகள் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகந்தியின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோகம்
சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கும் வயதில் செல்போனில் வாலிபர் ஒருவருடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாழப்பாடி பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.