< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

தக்கலை அருகே வகுப்பு முடிந்து தாமதமாக வருவதை தாயார் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை,

தக்கலை அருகே வகுப்பு முடிந்து தாமதமாக வருவதை தாயார் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு தாராவியை சேர்ந்தவர் மரியசெல்வகுமார் (வயது48). திருவனந்தபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், தெர்ஷா மோள் (16) என்ற மகளும் இருந்தனர்.

தெர்ஷா மோள் கருங்கலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் வகுப்பு முடிந்து அடிக்கடி தாமதமாக வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் தாயார் மகளை கண்டித்து வந்தார். இதன்காரணமாக மாணவி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மாடியில் உள்ள அறையில் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வௌியே வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறை கதவை உடைத்து திறந்து பார்த்த போது மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்