< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை
|7 July 2023 3:41 PM IST
சென்னை அடுத்த பல்லாவரத்தில் தாய் திட்டியதால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 16). இவர், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு தேவையான தண்ணீரை பிடித்து வைக்கவில்லை என்று ஜெகதீசையும், அவருடைய சகோதரனையும், அவர்களுடைய தாயார் மாரியம்மாள் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றிருந்த சகோதரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜெகதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.