< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கடலூரில் பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
|5 Jun 2022 10:54 PM IST
கடலூரில் பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டார். இது பற்றி அவரது தந்தை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சந்துரு அந்த மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சந்துரு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.