< Back
மாநில செய்திகள்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் 14-ம் தேதி வெளியாகிறது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் 14-ம் தேதி வெளியாகிறது

தினத்தந்தி
|
11 May 2024 12:46 PM IST

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை 14-ந்தேதி www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்