தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
|தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 27-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.
மேலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அவர்கள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.