கன்னியாகுமரி
பூதப்பாண்டி அருகே பிளம்பர் மர்ம சாவு
|பூதப்பாண்டி அருகே பிளம்பர் மர்மமாக இறந்தார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜோசப்பெர்லின் (வயது56), பிளம்பர். இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக ஜோசப்பெர்லின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கும், நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அவரது அண்ணன் மேரி பாஸ்கருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு ஜோசப்பெர்லின் இறந்து கிடப்பதும், இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பெர்லின் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.